அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது கூன் குருடு செவிடு இன்றி பிறத்தல்
இந்த வரிகள் மனிதர்களுக்கு இந்த மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்த்தவேண்டும் என்று எண்ணிய ஒரு கவியின் வரிகள் ஆனால் இன்று ஏன் இங்கு மனிதனாய் பிறந்தோம் என்று தெரியாமல், மனித வாழ்வின் மகத்துவம் புரியாமல் இந்த பூமியில் வாழ்ந்து .. அல்ல வாழ்ந்து என்று சொல்ல முடியாது வந்து சென்று கொண்டிருக்கிறோம், இந்த வாழ்க்கைக்கும் ஒரு மிருகம் வாழும் வாழ்க்கைக்கும் என்ன வித்தியாசம்? யோசித்து பார்த்தால் நானும் இந்த வாழ்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அட கடவுளே இப்படி ஒரு நிலைமையை ஏன் எனக்கும் கொடுத்தாய் என்று அவனை பார்த்து கேட்டேன்.. அதற்கு அவன் சொன்ன பதில்... நீயே மீண்டும் யோசித்து பார் உனக்கே தெரியும் என்றான்.
மறுபடியும் யோசிக்க வேண்டுமா என்ற எண்ணத்துடன் வேலையை (யோசிக்கும் வேலையை) ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் தோன்றிய எண்ணங்களை இங்கே தரவிருக்கின்றேன்.
ஒருவன் எதனால் மனிதனாக பிறக்கின்றான்? தெரியவில்லை சிலர் பூர்வ ஜென்ம புண்ணியம் என்கின்றார்கள் அதை பற்றி நான் யோசிக்க விரும்பவில்லை. இருக்கின்ற ஜென்மத்தில் எப்படி வாழ்வது என்பது தான் என்னுடைய கேள்வியாக இருக்கின்றது. என்னை பெற்றெடுத்த அன்னை அவளுக்கு நான் என்ன செய்தேன்? தந்தை ... அவருக்கு என்ன செய்தேன்? அன்னைக்கு இது வரை ஒன்றும் செய்தது இல்லை. தந்தை அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்து இருக்கின்றேன். இப்படி யோசித்து கொண்டிருந்த நான் கடவுளிடம் மறுபடியும் கேட்டேன். கடவுளே நான் யோசித்தேன் ஆனால் எனக்கு பதில் கிடைக்க வில்லை. எனக்கு தெரிந்த கேள்விகளை நான் என்னிடமே கேட்டு விட்டேன் அதற்கு பதில் உள்ளது.. இப்பொழுது எனக்கு என்ன கேள்வி கேட்க வேண்டும் என்றே தெரிய வில்லை என்றேன். அதற்கு அவன் கேட்ட கேள்வி என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது அப்படி அவன் கேட்ட கேள்வி உன் தாய் தந்தை தவிர வேறு யாருக்கும் நீ எதாவது செய்ய வேண்டுமா என்றான் நான் இல்லை என்றேன்.. அப்போது அவன் சொன்னது உன்னையும் உன் பெற்றோரையும் தாங்கும் இந்த உலகத்திற்கு நீ என்ன செய்தாய் என்றான். நான் யோசித்தேன்... பதில் சொன்னேன் நான் வருமான வரி கட்டுகிறேன் , வாங்குகின்ற பொருளுக்கு சேவை வரி கட்டுகிறேன் இதற்கு மேல் என்னால் வேறொன்றும் செய்ய முடியாது என்று. அவன் சொன்னான் அட முட்டாளே உன் சமுதாயம் நன்றாக இருந்தால் தான் உன் தனிப்பட்ட வாழ்கையும் நன்றாக இருக்கும் இன்று உன் சமுதாயம் நன்றாக இருக்கின்றதா என்று யோசித்து பார் என்றான்.
சமுதாயம் நன்றாக இருக்கின்றதா? தெரியவில்லை சற்றே ஆழமாக நான் செய்யும் கடவுள் சொன்னதின்படி என்னுடைய வாழ்கை நன்றாக இருந்தால் சமுதாயம் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம்.. என்னுடைய வாழ்கை நன்றாக இருக்கின்றதா என்றால் இல்லை என்று சொல்லலாம். என்னுடைய வாழ்கை எப்படி சமுதாயத்தால் பாதிக்கடுகின்றது என்று யோசித்தேன்.
காலை சூரியன் உதிக்கும் முன்னரே எழுப்பி விடும் கொசு... காரணம் நான் இருக்கும் பகுதியில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பை. சரி எழுந்ததும் தினசரி நாளிதழ் வாங்க வெளியே சென்றால் அங்கே ரோட்டில் ஓடும் சாக்கடை நீர், அதை தாண்டி சென்றால் அங்கே தெருவில் முதல் நாள் இரவு மது அருந்தி விட்டு அந்த போதை தெளியாமல் கொசு கடிப்பது கூட தெரியாமல் உறங்கி கொண்டிருக்கும் இந்திய குடி-மகன் (இதில் அந்த இடத்திலே ராத்திரி சாப்பிட்ட உணவை வாய் வழியாக மீதும் வெளியே தள்ளி விட்டு மீண்டும் உறக்கம் அட உனக்கும் ஒரு நாய்க்கும் என்ன வித்தியாசம்?) அனைத்தையும் தாண்டி கடைக்கு சென்றதும் அங்கே சூடாக புகையிலையை பற்ற வைத்து வருவோர் முகத்தில் சற்றும் யோசிக்காமல் ஊதிகொண்டிருந்தார் ஒருவர் அவரையும் தாண்டி நாளிதழை பெற்றுக்கொண்டு திரும்பி வந்தேன். ஒரு கடைக்கு செல்வதற்குள் இத்தனை அசிங்கங்களை தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது.
இங்கே நடந்த பல விஷயங்கள் நாம் தினமும் கடந்து வரும் விஷயங்கள் தான் இதை மாற்ற நாம் என்ன செய்தோம்? ஒன்றும் இல்லை அப்படி செய்து இருந்தால் இந்த சங்கடங்கள் நம்முடன் நம்முடைய தெருவில் குடிஇருந்திருகுமா?
... கடவுளுடன் என்னுடைய கேள்வி பதில் தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment